Friday, July 14, 2017

பாவனா கடத்தல் வழக்கு: காவ்யா மாதவனிடம் போலீஸ் விசாரணை


பாவனா கடத்தல் வழக்கு: காவ்யா மாதவனிடம் போலீஸ் விசாரணை



15 ஜூலை, 2017 - 10:25 IST






எழுத்தின் அளவு:






Police-enquiry-with-Kavya-madhavan


நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னணி நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது போலீஸ் காவலில் விசாரணை நடந்து வருகிறது.

கடத்தலுக்கு நடிகையும், திலீப்பின் இரண்டாவது மனைவியுமான காவ்யா மாதவனும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் காவ்யா மாதவன், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாயாருடன் தலைமறைவாகி விட்டார். அவர் பெங்களூரில் தோழி வீட்டில் இருப்பதை அறிந்த போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் கைது செய்ய வேண்டியது இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கேரளா வந்த காவ்யா மாதவன், போலீசார் குறிப்பிட்ட ரகசிய இடத்தில் தனது தாயாருடன் போலீஸ் முன்பு ஆஜராகி உள்ளார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

"பாவனாவை மிரட்டுவதற்காக ஏதோ சிறிதாக செய்யப்போகிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது இவ்வளவு பெரிய பிரச்னையில் கொண்டு வந்து விடும் என்று கனவிலும் நினைக்கவில்லை. பாவனா என் தோழி தான். இது தவிர இந்த கடத்தலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று காவ்யா, போலீசாரிடம் கூறியுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


0 comments:

Post a Comment