திலீப்புடன் போலீஸ் செல்பி: உண்மை இதுதான்..!
14 ஜூலை, 2017 - 17:45 IST
பாவனா விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மலையாள நடிகர் திலீப்பை தற்போது கேரள போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது. மேலும் அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திலீப்பை அழைத்துச்செல்லும் போலீஸ்காரர்கள் இருவர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
ஒருபக்கம், அரெஸ்ட் ஆகி ஜெயிலுக்கு போகும்போது கூட செல்பிக்கு போஸ் என்ன வேண்டிக்கிடக்கு என திலீப்பையும், இன்னொரு பக்கம் ஒரு குற்றவாளியுடன் செல்பி எடுத்துக் கொள்ள போலீஸ்காரர்களுக்கு வெட்கமாக இல்லையா என்று சோஷியல் மீடியாவில் கடுமையான விமர்சனம் கிளம்பியது.. ஆனால் இந்த செல்பி இப்போது எடுக்கப்பட்டதல்ல என்பது தெரியவந்துள்ளது.
அந்த புகைப்படத்தில் இருக்கும் 33 வயதான அருண் சைமன் என்கிற போலீஸ்காரர் சில மாதங்களுக்கு முன் திலீப் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தபோது, அவருடன் தானும் தனது சக போலீஸ்காரரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பியை அப்போது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். ஆனால் திலீப் இப்படி கைது ஆவார் என்றோ, அந்த செல்பி இந்த நேரத்தில் இப்படி ஒரு சர்ச்சையை கிளப்பும் என்றோ அவர் நினைத்தும் பார்க்கவில்லை.. இதுகுறித்து தற்போது மேலிடத்தில் அவர் உரிய விளக்கமும் அளித்துள்ளாராம்.
0 comments:
Post a Comment