ஹீரோவாக அறிமுகமாகும் சரிதா மகன்..!
15 ஜூலை, 2017 - 16:07 IST
வாரிசுகள் ஹீரோவாக அறிமுகமாகும் வரிசையில் தற்போதைய புதிய வரவாக மலையாள நடிகர் முகேஷின் மகனான ஷ்ரவன் 'கல்யாணம்' என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இவர் முகேஷின் முன்னாள் மனைவி சரிதாவின் மகன் ஆவார். இந்தப்படத்தை ராஜேஷ் நாயர் என்பவர் இயக்குகிறார்.
கடந்த வருடம் பிஜுமேனன் நடித்த 'சால்ட் மேங்கோ ட்ரீ' என்கிற படத்தை இயக்கியவர் தான் இந்த ராஜேஷ் நாயர். தனது மகனை கதாநாயகனாக்கும் எந்த முயற்சியிலும் முகேஷ் ஈடுபடவில்லையாம். ஒருமுறை துபாயில் வைத்து ஷ்ரவனை சந்தித்த இயக்குனர் ராஜேஷ் நாயர், தனது படத்திற்கு பொருத்தமான பக்கத்து வீட்டு பையன் தோற்றத்தில் ஷ்ரவன் இருந்ததால் அவரை கதாநாயகனாக்கி விட்டாராம்.
அழகான காதல் ஜோடி, அவர்களது திருமணம் கல்யாணத்தில் முடிகிறதா இல்லையா என்பதை காமெடி கலந்து சொல்கிறார்களாம். இந்தப்படத்தின் கதையை கோவிந்த் விஜய், சுமேஷ் மது மாறும் ராஜேஷ் நாயர் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.. சமீபத்தில் தமிழில் வெளியான 'யானும் தீயவன்' படத்தில் நடித்த வர்ஷா பொல்லாமா தான் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் ஷ்ரவனின் தந்தை முகேஷும், நடிகர் சீனிவாசனும் நாயகன், நாயகியின் தந்தையராக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
0 comments:
Post a Comment