பிரபல அம்மா நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது படங்களை இயக்கி நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
இது இந்தி மீடியம் என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது இது ஒரு புதிய கதைக்களம் என தெரிய வந்துள்ளது.
இதற்கு ஹவுஸ் ஓனர் என்று டைட்டில் வைத்திருக்கிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளதாவது…
’முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படத்தை இயக்க நினைத்தேன். அப்போது என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததால் அவளது திருமணத்துக்கு பிறகு அதை இயக்கலாம் என விட்டுவிட்டேன்.
நான் மும்பைக்கு சென்றிருந்த போது ஒரு இந்திப்படத்தை பார்த்தேன். அதை தமிழில் தயாரிக்க முடிவு செய்தேன். சில காரணங்களால் அது நடக்கவில்லை.
அந்த படம் தந்த பாதிப்பில் ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் ஹவுஸ் ஓனர்.
ஒரு தம்பதி தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பதுதான் லைன். இதை காமெடியாக சொல்கிறேன்.
அசோக் செல்வன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
Lakshmi Ramakrishnan going to direct Aishwarya Rajesh for House Owner
0 comments:
Post a Comment