Saturday, July 15, 2017

சாய் பல்லவி படத்துக்கு யு சான்று


சாய் பல்லவி படத்துக்கு யு சான்று



15 ஜூலை, 2017 - 15:02 IST






எழுத்தின் அளவு:






Sai-Pallavi-movie-got-u-certificate


மலையாளத்தில் நிவின்பாலியுடன் சாய் பல்லவி அறிமுகமான படம் பிரேமம். அந்த படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் என்கிற கேரக்டர் தென்னிந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது. அதன்பிறகு சில முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்புகள் அவரைத்தேடிச் சென்றபோதும் தனது இமேஜை காப்பாற்றிக்கொள்ளும் வகையிலான கதாபாத்திரங்களாக தேடி வந்த அவர், தெலுங்கில் பிதா என்ற படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் வருண் தேஜ் நாயகனாக நடிக்க, நயன்தாரா நடித்த அனாமிகா படத்தை இயக்கிய சேகர் கம்முலா படத்தை இயக்கியிருக்கிறார்.

மேலும், காதல் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சாய் பல்லவியை சுற்றித்தான் கதை பின்னப்பட்டிருக்கிறதாம். கிராமத்து பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர், பிரேமம் என்னை அடையாளப் படுத்திய படம். ஆனால் இந்த பிதா என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் படமாக அமையும் என்று கூறி வருகிறார். வருகிற ஜூலை 21-ந்தேதி திரைக்கு வரும் இந்த பிதா படத்திற்கு நேற்று யு சான்றிதழ் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


0 comments:

Post a Comment