Monday, July 17, 2017

மகனுக்காக 6 வருடம் கழித்து ஒன்றாக மேடையேறிய முகேஷ்-சரிதா..!


மகனுக்காக 6 வருடம் கழித்து ஒன்றாக மேடையேறிய முகேஷ்-சரிதா..!



17 ஜூலை, 2017 - 17:53 IST






எழுத்தின் அளவு:






Mukesh---Saritha-at-a-stage-for-their-son


எழுபது எண்பதுகளில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சரிதா. அதன்பின் 1988ல் மலையாள நடிகர் முகேஷை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். பின்னர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே 2011ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுக்கு ஷ்ரவன் மற்றும் தேஜா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதன்பின் மெத்தில் தேவிகா என்கிற டான்சரை முகேஷ் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது சரிதாவின் மகன் ஷ்ரவன், 'கல்யாணம்' என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்தப்படத்தை ராஜேஷ் நாயர் என்பவர் இயக்குகிறார். யானும் தீயவன்' படத்தில் நடித்த வர்ஷா பொல்லாமா தான் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் ஷ்ரவனின் தந்தை முகேஷும், நடிகர் சீனிவாசனும் நாயகன், நாயகியின் தந்தையராக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப்படத்தின் துவக்கவிழா நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முகேஷ், தற்போது எம்.எல்.ஏவாக இருப்பதால் இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் கலந்து கொண்டார். அதைவிட ஆச்சர்யம் கடந்து ஆறு வருடமாக பிரிந்திருந்தாலும், தங்களது மகனுக்காக மன வேறுபாடுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சரிதாவும் முகேஷும் ஒரே மேடையில் இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றதுதான். கடந்த சில வருடங்களில் முகேஷ் அமைதியாக இருந்தாலும் கூட, சரிதா அவ்வப்போது முகேஷ் மீது ஏதாவது குற்றச்சாட்டுக்களை அடுக்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment