Monday, July 17, 2017

ரேஷன் கடை ஊழியர்களின் வாழ்க்கையை சொல்லும் சீமத்தண்ணி


ரேஷன் கடை ஊழியர்களின் வாழ்க்கையை சொல்லும் சீமத்தண்ணி



17 ஜூலை, 2017 - 12:24 IST






எழுத்தின் அளவு:






Seemathani-movie-to-speak-about-Rationshop-owners


கிரேட் எம்பரர் புரொடக்ஷன்ஸ் எனும் புதிய பட நிறுவனம் சார்பில் சி.பிரேம் குமார் தயாரிக்கும் படம் சீமத்தண்ணி. முன்னனி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய விஜய் மோகன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார். விதார்த், விஜய் வசந்த கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்ஷா நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மசானி ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் திருமூர்த்தி இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் விஜய் மோகன் கூறியதாவது:

ரேஷன் கடையே தாய் வீடாக நினைத்து வாழும் 2 அநாதை நண்பர்களுக்கும், 10க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் "தங்கமாரி" எனும் கதாபாத்திரத்திற்க்கும் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் யதார்த்தமாகவும், ரசிக்கும் படியும் உருவாகிறது. மலர்விழி எனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சாந்தினி. விரைவில் படப்பிடிப்புகள் துவங்குகிறது. என்றார்.


0 comments:

Post a Comment