Tuesday, July 18, 2017

ரவிதேஜாவுக்காக மீடியாக்களிடம் கண்ணீர் விட்ட தாயார் ராஜலட்சுமி!


ரவிதேஜாவுக்காக மீடியாக்களிடம் கண்ணீர் விட்ட தாயார் ராஜலட்சுமி!



18 ஜூலை, 2017 - 14:28 IST






எழுத்தின் அளவு:






Ravi-Teja-mother-give-clean-certificate


போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த 12 நடிகர் நடிகைகள் இருப்பதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்தவகையில், நடிகர் நவ்திப், தருண், சார்மி, முமைத்கான் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இவர்கள் தவிர இன்னும் சிலரது பெயர்களும் பட்டியலில் உள்ளதாம். இவர்கள் மூலம் போதைப் பொருள் சினிமா நட்சத்திரங்களுக்கு சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் இந்த போதைப்பொருளை உபயோகித்து வந்ததாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து ரவிதேஜா எந்த பதிலும் சொல்லாத நிலையில், இதுவரை மீடியாக்களுக்கே காட்சி கொடுக்காத அவரது தாயார் ராஜலட்சுமி, கண்ணீர் மல்க மீடியாக்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், என் மகன் ரவிதேஜா ஒரு அப்பாவி. அவருக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம்கூட கிடையாது. அப்படியிருக்க அவர் போதை பொருள் உபயோகிப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியாக உள்ளது. மேலும், தனது தம்பி பரத்தின் இறப்பு கொடுத்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் ரவிதேஜா மீளாமல் இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் மீது இப்படியொரு செய்தியை பரப்புவது வேதனையாக உள்ளது. அதனால் அவரை போதை நடிகர் பட்டியலில் சேர்க்காதீர்கள்.

மேலும், தற்போது ராஜா தி கிரேட், டச் செஸ்ஸி சூடு ஆகிய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ரவிதேஜா. இதுபோன்ற அவதூறு செய்திகளால் அதிர்ச்சியடைந்திருக்கிறார் என்று கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.


0 comments:

Post a Comment