Thursday, July 13, 2017

ஸ்பைடர் படத்திற்காக ஐரோப்பா செல்லும் மகேஷ்பாபு - ராகுல் பிரீத் சிங்!


ஸ்பைடர் படத்திற்காக ஐரோப்பா செல்லும் மகேஷ்பாபு - ராகுல் பிரீத் சிங்!



13 ஜூலை, 2017 - 15:07 IST






எழுத்தின் அளவு:






Mahesh-Babu---Rakul-Preet-Singh-to-fly-Europe


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படம் ஸ்பைடர். இந்த படத்தில் ராகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். இதற்கு முன்பு நடித்த தெலுங்கு படங்களில் கவர்ச்சி நாயகியாக மட்டுமே நடித்திருந்த அவருக்கு இந்த படத்தில் கதையோடு பயணிக்கும் பர்பாமென்ஸ் ரோல் கொடுத்திருக்கிறாராம் முருகதாஸ். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே பேலன்ஸ் இருந்தது. அதில் ஒரு பாடல் காட்சியை ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் படமாக்கி விட்டனர்.

அதையடுத்து, இன்னொரு டூயட் பாடலை ஐரோப்பா சென்று படமாக்குகிறார்களாம். அதற்காக வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி மகேஷ்பாபு - ராகுல் பிரீத் சிங் ஆகிய இருவரும் ஐரோப்பா செல்கிறார்களாம். மேலும், ஸ்பைடர் படத்தில் தனக்கான வசன காட்சிகள் படமாக்கப்பட்டு முடித்ததுமே பாரத் அனி நேனு படத்தில் நடிக்கத் தொடங்கிய மகேஷ்பாபு, கடந்த சில தினங்களாக ஸ்பைடர் படத்தின் பாடலில் நடித்தவர், இந்த வாரம் இறுதியில் மீண்டும் பாரத் அனி நேனு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.


0 comments:

Post a Comment