விடுமுறை நாளிலும் தியேட்டர்களுக்கு வராத மக்கள்
17 ஜூலை, 2017 - 18:09 IST
ஜிஎஸ்டி வரி விதிப்பால் தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், மக்கள் தியேட்டர் விலை உயர்வை பெரிதாகவே எடுத்துக் கொண்டுள்ளார்கள் எனத் தெரிகிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தியேட்டர்களுக்கு மக்கள் வருவது வெகுவாக் குறைந்துவிட்டதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக, புதிய படங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பல காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருக்கும். ஆனால், இரண்டு வாரங்களாக ஓரிரு தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே அரங்கு நிறைந்துள்ளன. மற்ற தியேட்டர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். மல்டிபிளக்ஸ்களில் தான் இப்படி என்றால் வெளியூர்களில் நிலைமை இன்னும் மோசமாம். வெள்ளிக் கிழமை வெளிவந்த புதுப் படங்களைப் பார்க்க பல தியேட்டர்களில் 10 பேர் கூட வரவில்லையாம்.
இன்னும் கேளிக்கை வரி விவகாரம் பேச்சு வார்த்தை அளவில் தான் உள்ளது. அது வருமா, வராதா என்பது பேச்சு வார்த்தை முடிந்த பின்னர்தான் தெரியும். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் உள்ள அபிராமி தியேட்டர் இணையதள முன்பதிவுக் கட்டணத்தை ரத்து செய்துவிட்டது. அதன் மூலம் இனி 30 ரூபாய் மிச்சமாகும். இது போல மற்ற தியேட்டர்களும் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை விட பார்க்கிங் கட்டணம், தின்பண்டங்கள் விலை குறைக்கப்பட வேண்டும் என்பது அவர்களது முக்கி டார்கெட் ஆக உள்ளது.
நிலைமை இப்படியே போனால் தமிழ்நாட்டில் இந்த வருடம் பல தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment