Thursday, July 20, 2017

வாள் சண்டையின் போது கங்கனா படுகாயம்


வாள் சண்டையின் போது கங்கனா படுகாயம்



20 ஜூலை, 2017 - 15:14 IST






எழுத்தின் அளவு:






Kangana-Ranaut-injured-at-shooting-spot


பாலிவுட்டின் பிரபல நடிகையான கங்கனா ரணாவத், தற்போது, வானம் இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் "மனிகர்னிகா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர், ஜான்சி ராணி வேடத்தில் நடிக்கிறார். இதற்காக குதிரையேற்றம், வாள்சண்டை உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றுள்ளார் கங்கனா. தற்போது இதன் படப்பிடிப்புகள் ஐதரபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று கங்கனா சம்பந்தப்பட்ட வாள் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக, கங்கனாவின் நெற்றியை வாள் பதம் பார்த்தது. இதில் பலத்த காயம் அடைந்த கங்கனா, ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் 15 தையல்கள் போடப்பட்டன. இன்னும் இரண்டு வாரம் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காயம் இன்னும் கொஞ்சம் ஆளமாக பதிந்திருந்தால் கூட நிச்சயம் கங்னாவிற்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


0 comments:

Post a Comment