Friday, July 14, 2017

சென்னையில் 60 நாட்கள் காலா படப்பிடிப்பு


சென்னையில் 60 நாட்கள் காலா படப்பிடிப்பு



14 ஜூலை, 2017 - 18:36 IST






எழுத்தின் அளவு:






Kaala-Shooting-60-days-in-chennai


பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டது. முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றார் ரஜினி. தற்போது சென்னை திரும்பியுள்ள ரஜினி காலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

காலா படத்துக்காக சென்னை புறநகரில் உள்ள ஈவிபி பூங்காவில், மும்பை தாராவி போன்ற செட் போடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இங்கு எடுக்கப்படும் காட்சிகளோடு ரஜினி சம்பந்தப்பட்ட மொத்த காட்சிகளும் முடிந்துவிடுமாம்.
சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஜினி தவிர்த்து ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, அருள்தாஸ் ஆகிய மற்ற கலைஞர்கள் அடங்கிய குழுவினரோடு மும்பை செல்ல இருக்கிறார் பா.ரஞ்சித். அங்கே சில நாட்கள் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் பா.ரஞ்சித். ஹியூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல் ஆகியோரும் மும்பை ஷெட்யூலில் கலந்து கொள்கின்றனர்.


0 comments:

Post a Comment