கடந்த சில வருடங்களாகவே காதல் ஜோடிகளாக தங்களை காட்டி கொண்டவர்கள் விஷால் மற்றும் வரலட்சுமி.
ஆனால் நடிகர் சங்க தேர்தலின்போது இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் அதனால் தன் காதலை முறித்துக் கொண்டதாகவும் வரலட்சுமி தெரிவித்தார்.
தன் ட்விட்டர் பக்கத்தில்… ‘காதலில் பிரேக் அப் என்பது புதிய பரிமாணம் அடைந்திருக்கிறது.
7 வருட உறவை ஒருவர் தனது மேனேஜர் மூலமாக முறித்துக்கொள்வதாக கூறி உள்ளார். நாடு எங்கே வந்திருக்கிறது என்பதை எண்ணும்போது சிரிப்பு வருகிறது. காதல் எங்கே?’ என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் ‘துப்பறிவாளன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசும்போது…
‘நான் காமராஜர் அய்யாவின் வழியில் நடப்பவன்.
ஆனால் அவரைப் போல பிரம்மச்சாரியாக இருக்கமாட்டேன்.
லட்சுமிகரமான பெண்ணை விரைவில் திருமணம் செய்வேன்’ என்றார்.
லட்சுமிகரமான பெண் வரலட்சுமியா? அல்லது வேறு பெண்ணா? என்பதற்கு விஷால்தான் விளக்கம் சொல்லவேண்டும்.
0 comments:
Post a Comment