தமிழில் சொந்தக்குரலில் டப்பிங் பேசிய பஹத்பாசில்
14 ஜூலை, 2017 - 17:58 IST
மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் 'வேலைக்காரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 5ஆம் தேதியன்று வெளிளானது. ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து படம் வெளியாகிறது. எனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இயங்கி வருகிறார் மோகன் ராஜா.
இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் அறிவு என்ற கேரக்டரில் நடித்துள்ளாராம். படிப்பறிவு இல்லாத அனாதையான அறிவு, ஒரு சேரிப்பகுதியின் மிகப்பெரிய பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்கிறார் என்பதே படத்தின் கதையாம்.
கதாநாயனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஆதி என்ற கேரக்டரில் மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்துள்ளாராம். 'ஆதி' கேரக்டருக்கு தன் சொந்த குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார் பஹத்.
சிவகார்த்திகேயன், பஹத் கேரக்டர்களுக்கு அறிவு, ஆதி என்ற பெயர்களோடு வெவ்வேறு காட்சிகளில் வேறு பெயர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நயன்தாராவுக்கு மிருணாளினி என்ற கேரக்டர்.
மோகன் ராஜாவின் முதல் படமான 'அனுமான் ஜெயந்தி' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்த சினேகா, 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'வேலைக்காரன்' படத்தின் மூலம் ராஜாவுடன் இணைந்துள்ளார். இந்தப்படத்தில் கஸ்தூரி என்ற கேரக்டரில் நடித்துள்ளாராம் சினேகா.
0 comments:
Post a Comment