சல்மானுடன் ஜோடி சேர்கிறார் ஜாக்குலின்
16 ஜூலை, 2017 - 13:26 IST
நடனத்தை மையமாக கொண்ட படம் ஒன்றை டைரக்டர் ரெமோ டிசோசா இயக்க உள்ளார். இப்படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்டு பேசிய சல்மான் கான், இப்படத்தில் தனக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார் என்ற தகவலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் சல்மான் கான் பேசுகையில், ரெமோ இயக்க உள்ள படத்தில் நானும் ஜாக்குலினும் நடிக்கிறோம். ஜாக்குலின் ஒரு அற்புதமான டான்சர். இந்த படத்திலும் அவர் தனது திறமையை வெளிக்காட்டுவார் என நம்புகிறேன் என்றார். சல்மான் கான், தான் தற்போது நடித்து வரும் டைகர் ஜிந்த ஹை படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த பிறகு புதிய படத்தின் வேலைகளை துவக்க உள்ளார்.
0 comments:
Post a Comment