Tuesday, July 18, 2017

தல-தளபதி இருவரது கணக்கையும் சரி செய்த அனிருத்


ajith-vijayஅஜித் நடித்த வேதாளம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.


இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் மிகப்பெரிய ஹிட்டடிக்க, விவேகம் படத்திற்கு அனிருத்தையே ஒப்பந்தம் செய்தார் அஜித்.

இதன் மூலம் அஜித்துடன் இரண்டு படங்களில் பணிபுரிந்துவிட்டார்.

ஆனால் விஜய்யுடன் கத்தி படத்தில் மட்டுமே அனிருத் பணிபுரிந்திருந்தார்.

இந்நிலையில் ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள விஜய்62 படத்திற்கு தற்போது அனிருத் இசையமைப்பது உறுதியாகிவிட்டதாம்.

இதன் மூலம் விஜய் கணக்கையும் சரி செய்துவிட்டார் அனிருத்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதற்காக வருகிற செப்டம்பர் மாதம் அமெரிக்க செல்கிறார் அனிருத்.

Anirudh composing music for Vijay 62 directed by AR Murugadoss

0 comments:

Post a Comment