Friday, July 14, 2017

பிக்பாஸ் சர்ச்சை : கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு


பிக்பாஸ் சர்ச்சை : கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு



14 ஜூலை, 2017 - 12:08 IST






எழுத்தின் அளவு:






Bigboss-issue-:-Police-security-for-Kamal-house


பிக்பாஸ் சர்ச்சை தொடர்பாக நடிகர் கமல்ஹாசனின், சென்னை, ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உலகம் முழுக்க பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, முதன்முறையாக தமிழகத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் ஆரம்பமானதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிகழ்ச்சி, தமிழ் கலாச்சாரத்திற்கு சீர்கேடானது, பிக்பாஸை தடை செய்ய வேண்டும், கமல் உள்ளிட்ட போட்டியாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் இருதினங்களுக்கு முன்னர் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தன் தரப்பு வாதத்தை ஆவேசமாக முன் வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்ரி ரகுராம், "சேரி பிஹேவியர்" என்ற பேசியதும் கண்டத்திற்கு உள்ளாக, அவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல்வேறு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வீட்டின் முன்பு ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சென்னை, ஆழ்வார் பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேப்போன்று நிகழ்ச்சியை நடத்தும் விஜய் டிவி அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment