Friday, July 14, 2017

திலீப்பிற்கு ஜாமின் மறுப்பு : மேலும் ஒரு நாள் போலீஸ் கஸ்டடி


திலீப்பிற்கு ஜாமின் மறுப்பு : மேலும் ஒரு நாள் போலீஸ் கஸ்டடி



14 ஜூலை, 2017 - 11:49 IST






எழுத்தின் அளவு:






Again-police-custody-for-dileep


தென்னிந்திய திரையுலகை திடுக்கிடச் செய்த சம்பவம், முன்னணி நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்கு கூட்டு சதியாக திகழ்ந்தது மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திலீப், ஜாமின் கேட்டு கொச்சியில் உள்ள அங்கமாலி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாக கூறி ஜாமின் தர கோர்ட் மறுத்தது. அதோடு திலீப்பை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை முடிந்து திலீப் இன்று மீண்டும் அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் மேலும் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். அவர்களுக்கு ஒரு நாள் அனுமதி அளித்தார் நீதிபதி. அதோடு ஜாமின் கேட்ட திலீப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.


0 comments:

Post a Comment