சினிமா கை கொடுக்குமா?
13 ஜூலை, 2017 - 23:57 IST
சின்னத் திரையில் நடித்தவர்கள், வெள்ளித் திரைக்கு வருவது வழக்கம் தான். இப்போது, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும், சினிமாக்களில் நடிக்கும் கலாசாரம் உருவாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர், சடகோபன் ரமேஷ், ஒருசில திரைப்படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த வரும், சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரருமான, ஸ்ரீசாந்தும், தற்போது, ஹீரோவாக மாறியுள்ளார். டீம் - 5 என்ற பெயரில், மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில், ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் தான், ஹீரோவாக நடிக்கிறார், ஸ்ரீசாந்த். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். ஸ்ரீசாந்துக்கு, கிரிக்கெட் தான் கை கொடுக்கவில்லை; திரையுலகமாவது கை கொடுக்குமா என, பார்ப்போம்.
0 comments:
Post a Comment