Friday, July 14, 2017

காமெடி நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ்


காமெடி நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ்



15 ஜூலை, 2017 - 10:18 IST






எழுத்தின் அளவு:






Baba-Ramdev-in-Tamil-Comedy-Program


விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ். இந்த நிகழ்சியில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி வருகிறார்கள். ரோபோ சங்கர், நடிகை ரம்பா, தொகுப்பாளர் சிந்து ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு குழந்தைகளையும் பாரட்டியும், வாழ்த்தியும் வருகிறார்கள்.

அந்த வரிசையில் பிரபல யோகா குருவும், பதஞ்சலி தயாரிப்பு நிறுவன தலைவருமான பாபா ராம்தேவ் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். குழந்தைகளின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் அவர்களை பாராட்டினார். குழந்தைகளுக்கான சில யோகாசனங்களையும் சொல்லிக் கொடுத்தார். சுவையான இந்த எபிசோட்கள் இன்றும், நாளையும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


0 comments:

Post a Comment