தெலுங்குத் திரையுலகத்தில் 'போதை'க்கு அடிமையானவர்கள்
14 ஜூலை, 2017 - 14:49 IST
தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில நாட்களாகவே 'போதைப் பொருளுக்கு' அடிமையாகியுள்ள சிலரைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இயக்குனர், நடிகர், நடிகைகள் என சிலர் போதை வஸ்துகளைப் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பு விசாரணைப் பிரிவு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், சுரேஷ் பாபு ஆகியோரும் பேசியுள்ளனர்.
அதில் சில முக்கிய ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் இருப்பதாகவும் தெரிகிறது. அவர்கள் யார் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும், சிலர் அவர்கள் யார் என்பதை தெரியப்படுத்தியிருக்கிறார்கள். போதைப் பொருள் பழக்கக் குற்றத்தில் சிக்கியுள்ள தெலுங்குத் திரையுலகினர் விரைவில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment