Thursday, July 20, 2017

நல்ல கணவராக இல்லாத கமல் எப்படி நல்ல தலைவராக முடியும்… ஓ.எஸ்.மணியன்


kamal haasan and Minister OS Manianதமிழக அரசியல் மற்றும் ஊழல் குறித்து கமல்ஹாசன் பேசியதால், தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.


கமலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமலுக்கு நடிக்கத் தெரியும் ஆனால் அரசியல் தெரியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார்.

மேலும் மற்ற அமைச்சர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கட்சியை சேர்ந்த ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளதாவது…

“தன் மனைவிக்கு நல்ல கணவராக கமல் இல்லை. அவரின் பிள்ளைகளுக்கும் நல்ல தந்தையாக இல்லை.

மொத்த்த்தில் அவர் ஒரு நல்ல குடும்பஸ்தனாக இல்லை.

பின்பு அவர் எப்படி மக்களுக்கு நல்ல தலைவராக முடியும்.” என்று பேட்டியளித்துள்ளார்.

0 comments:

Post a Comment