இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் : ஏ.ஆர்.ரஹ்மான் மீது ரசிகர்கள் அதிருப்தி
14 ஜூலை, 2017 - 17:36 IST
மணிரத்னத்தின், ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். 25 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் ரஹ்மான், தமிழ் மட்டுமல்லாது இந்திய முழுக்க பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து ஆஸ்கர் விருதும் பெற்று சாதனை படைத்தார்.
படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, ரஹ்மான் உலக நாடுகள் பலவற்றிலும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அப்படி சமீபத்தில், லண்டனில் "நேற்று இன்று நாளை" என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தமிழ் பாடல்களையே பாடினார் ரஹ்மான்.
இது மற்ற மொழி ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் நிகழ்ச்சியை காண வந்திருந்த பெரும்பாலான வட மாநில ரசிகர்கள் எழுந்து சென்று விட்டனர். அதோடு அவர்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரஹ்மானுக்கு எதிராக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதோடு, டிக்கெட்டை தொகையை திருப்பி தரும்படியும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment