படங்களின் வெற்றி - தோல்வி என்னை பாதிக்காது : விவேக் ஓபராய்
18 ஜூலை, 2017 - 16:00 IST
பாலிவுட்டின் பிரபல நடிகர் விவேக் ஓபராய். தற்போது, இவர் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸாக உள்ளது. இதுதவிர பாலிவுட்டிலும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பேங்க் சோர் படம் தோல்வியை தழுவியது.
இதுகுறித்து விவேக் ஓபராயிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... "ஒரு படத்தின் வெற்றியோ, தோல்வியோ என்னை பாதிக்காது. நான் அதை கடந்து அடுத்த படத்திற்கு சென்றுவிடுவேன். வாழ்க்கை ஒரு நதியை போன்றது, தண்ணீரின் ஓட்டத்திற்கு ஏற்ப நாம் நீந்தி செல்ல வேண்டும், இல்லையேல் அது நம்மை மூழ்கடித்து விடும்". என்கிறார்.
0 comments:
Post a Comment