Saturday, July 15, 2017

வித்தியாசமான தோற்றத்தில் சைப் அலிகான்


வித்தியாசமான தோற்றத்தில் சைப் அலிகான்



15 ஜூலை, 2017 - 12:42 IST






எழுத்தின் அளவு:






Actor-Saif-Ali-Khans-look-from-the-film-Kaalakaandi


அக்ஷ்த் வர்மா இயக்கத்தில், சைப் அலிகான் நடித்து வரும் படம் "காலாகண்டி". சைப் உடன் தீபக் டாபிரியல், விஜய் ராஸ், குணால் ராய் கபூர், சோபிதா, அக்ஷ்ய் ஓபராய், இஷா தல்வார், சீனாஸ், சிவம் பாட்டில், அமைரா தஸ்தூர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் சைப் அலிகானின் வித்தியாசமான லுக்குடன் கூடிய புதிய போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் சைப் அலிகான், வெள்ளை நிற சட்டை அணிந்து அதன் மேல் வித்தியாசமான மஞ்சள் நிற கோட் அணிந்துள்ளார். கண்கள் கருப்பாகவும், தலைமுடியில் ஆங்காங்கே கலர், கலர் ரப்பர் பேண்ட் அணிந்த சின்ன சின்ன குடும்பியுடன் போஸ் தருகிறார். சைப்பின் இந்த வித்தியாசமான போட்டோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காலாகண்டி படம் வருகிற செப்., 8-ம் தேதி ரிலீஸாக உள்ளது.


0 comments:

Post a Comment