அக்ஷ்ய் படத்திலிருந்து சல்மான் வெளியேற்றம்
15 ஜூலை, 2017 - 12:59 IST
சில மாதங்களுக்கு முன்னர் அக்ஷ்ய் குமாரை ஹீரோவாக கொண்டு கரண் ஜோகர் மற்றும் சல்மான் கான் இருவரும் இணைந்து படம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது இந்தப்படத்திலிருந்து சல்மான் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சல்மான் நடிப்பில் வெளியான டியூப்லைட் படம் தோல்வியை தழுவியது. போரை பின்னணியாக கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்திருந்தார் இயக்குநர். ஆனால் ஏனோ இப்படம் ரசிகர்களை கவரவில்லை.
தற்போது அக்ஷ்ய்யை வைத்து தயாரிக்க உள்ள படமும் போரை மையமாக வைத்து தான் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அஜய் தேவ்கனும் இதேப்போன்று ஒரு படத்தை எடுக்க இருக்கிறாராம். ஆகையால் தான் சல்மான் இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment