மீடியாக்களிடம் கோபத்தை காட்டிய சமந்தா?
14 ஜூலை, 2017 - 14:16 IST
பாணா காத்தாடி சமந்தா, தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகையானவர், நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இப்போது திருமணம் வரை வந்து விட்டார்கள். இந்த நேரத்தில் தமிழ், தெலுங்கில் கைவசம் பல படங்களை வைத்திருக்கும் சமந்தா அந்த படங்களை திருமணத்திற்கு முன்பே நடித்துக்கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஒருவேளை திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்க மாட்டார் என்கிற சந்தேகத்தில் மீடியாவினர் திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா? மாட்டீர்களா? என்று அவரை கேட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் சமீபத்தில் இதுகுறித்து மீடியாவினர் கேட்டபோது கோபமடைந்து விட்டாராம் சமந்தா. இதே கேள்வியை திருமணம் செய்து கொள்ளப்போகும் ஒரு டாக்டரிடம் போய் கேட்பீர்களா? என்றும் சரவெடியாய் வெடித்து சிதறி விட்டாராம் சமந்தா.
0 comments:
Post a Comment