Tuesday, July 11, 2017

தொடர் புகார்கள் எதிரொலி: ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் பெயர் மாற்றம்

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் ரமேஷ் செல்வன் இந்த படத்தை டைரக்டு செய்து வருகிறார். படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற தலைப்பில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று கொலை செய்யப்பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையொட்டி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்தநிலையில் சந்தான கோபாலகிருஷ்ணன் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புதிய புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற படத்தின் தலைப்பை `நுங்கம்பாக்கம்’ என மாற்றியுள்ளதாக இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்திருக்கிறார். அதேநேரத்தில் படத்தில் நடித்து வரம் கதாபாத்திரங்களின் பெயர்களும் மாற்றப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுப்பையா தெரிவித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment