'முத்துலட்சுமி'யாக மாறிய வரலட்சுமி..!
11 ஜூலை, 2017 - 14:33 IST
கடந்த வருடம் 'கசபா' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்ததன் மூலம் மலையாள திரையுலகிலும் கால் பதித்தார் நடிகை வரலட்சுமி. அந்தப்படத்தில் தைரியமான பெண்ணாக அவர் ஏற்று நடித்த கேரக்டரும் அதில் அவரது நடிப்பையும் பார்த்து இப்போது மலையாளத்தில் சில வாய்ப்புகள் அவரை தேடி வர துவங்கியுள்ளன. தற்போது மம்முட்டியுடன் மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.
மேலும் 'காட்டு' (காற்று) என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப்படத்தை அருண்குமார் அரவிந்த் என்பவர் இயக்குகிறார். நடிகரும் காதாசிரியருமான முரளிகோபி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்தப்படத்தில் முத்துலட்சுமி என்கிற தைரியமான தமிழ்ப்பெண் கேரக்டரில் நடித்துள்ளாராம் வரலட்சுமி. இது முழுக்க முழுக்க அவரது நடிப்பிற்கு தீனிபோடும் கேரக்டராம். இப்போது லேட்டஸ்ட்டாக இந்தப்படத்தில் வரலட்சுமியின் முத்துலட்சுமி கெட்டப்புடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment