வைரலாகும் கைத்தறி உடையுடன் சமந்தாவின் கவர்ச்சி போட்டோக்கள்
11 ஜூலை, 2017 - 16:33 IST
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தார். இவர் விரைவில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா வீட்டு மருமகள் ஆக உள்ளார். அதனால் தற்போது கைவசம் உள்ள தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை எல்லாம் வேகவேகமாக முடித்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா ஒரு மேகஸினுக்கு அளித்த கவர்ச்சி போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கைத்தறி ஆடைகளுடன் கூடிய உடையணித்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார் சமந்தா.
சமந்தாவும் அந்த போட்டோக்களை தனது டுவிட்டர் பகத்தில் பதிவிட்டு இருப்பதுடன், "கைதறி தான் எதிர்காலம், தொழிலாளியால் உருவாக்கப்பட்ட துணியை அணிந்தால் அதில் எப்போதும் ஒரு சிறப்பு இருக்கும்" என்று கூறி கைத்தறி ஆடையை பிரபலப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் கைத்தறி ஆடைகளின் தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். அதன்வெளிப்பாடாக தான் கைத்தறி ஆடையை இப்படியும் கவர்ச்சியாக உடையணித்து பிரபலப்படுத்தலாம் என்று எண்ணியிருப்பாரோ...!
இன்னொருபக்கம் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க போகிறது, இப்படியா போட்டோவுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுக்கிறது என சமூக வலைதளங்களில் கண்டனங்களும் எழாமல் இல்லை.
0 comments:
Post a Comment