Thursday, July 13, 2017

சூரியை புரோட்டா மாஸ்டராக்கிய சுசீந்திரன்!


சூரியை புரோட்டா மாஸ்டராக்கிய சுசீந்திரன்!



13 ஜூலை, 2017 - 12:20 IST






எழுத்தின் அளவு:






Soori-turn-as-Parotta-master


சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் சூரி. அதன்பிறகு குறுகிய காலத்தில் பிரபல காமெடியனாகி விட்ட அவர், இப்போது வெறும் காமெடியனாக மட்டுமின்றி, இன்னொரு ஹீரோ போன்று படம் முழுக்க பயணிக்கும் கதைகளாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறார்.

மேலும், தனது படங்களில் சூரியை காமெடியனாக பயன்படுத்தி வந்த சுசீந்திரன், மாவீரன் கிட்டு படத்தில் குணசித்ர வேடத்தில் நடிக்க வைத்தார். அந்த வேடம் அவருக்கு ஒர்க் அவுட்டாகும் என்று தான் அப்படி ரிஸ்க் எடுத்தாராம் சுசீந்திரன். ஆனால் அது எடுபடவில்லை.

இந்நிலையில், தற்போது தான் இயக்கியுள்ள அறம் செய்து பழகு படத்தில் சூரிக்கு ஒரு அதிரடியான காமெடி வேடம் கொடுத்துள்ளாராம் சுசீந்திரன். அதாவது, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் புரோட்டா கடைக்கு சென்று 50 புரோட்டா சாப்பிட வைத்து அவரை புரோட்டா சூரியாக்கிய அவர், இந்த படத்தில் புரோட்டா மாஸ்டராக்கி பிரமோஷன் கொடுத்திருக்கிறார். அந்தவகையில், இந்த படத்தில் புரோட்டா கடையில் நடக்கும் காமெடி காட்சிகள் படம் முழுக்க இடம் பெற்றுள்ளதாம்.


0 comments:

Post a Comment