Thursday, July 13, 2017

பாவனா கடத்தலில் கைதான திலீபுக்கு கலாபவன் மணி மரணத்திலும் தொடர்பு


Bhavana Kidnap case arrested Dileep in connection with Kalabhavan Manis deathநடிகை பாவனாவின் கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் சில தினங்களுக்கு முன் கைதானார் நடிகர் திலீப்.


அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் இவர் மீது புதிய குற்றச்சாட்டாக கலாபவன் மணி மரணத்திலும் தொடர்பிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் இயக்குனர் பைஜூ கொட்டாரக்கரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கலாபவன்மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன் பேசியதாவது…

தனது சகோதரர் மரணம் தொடர்பான விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என்றும், நடிகர் திலீபுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கலாபவன்மணி மரணத்தில் திலீபுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ஒரு பெண் தொலைபேசியில் தெரிவித்ததாக இயக்குனர் பைஜூ கொட்டாரக்கரா தெரிவித்துள்ளார்.

எனவே, கலாபவன் மணியின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

Bhavana Kidnap case arrested Dileep in connection with Kalabhavan Manis death

0 comments:

Post a Comment