Tuesday, July 11, 2017

ரஜினி ஸ்டைலில் பணத்தை திருப்பி கொடுக்கும் சல்மான்கான்


Salman khan in tubelightஇந்தி சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களின் மிக முக்கியமானவர் சல்மான்கான்.


இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெற்றிருக்கும்.

ஆனால், கடந்த மாதம் 23 ம் தேதி ரிலீஸ் ஆன ’டியூப்லைட்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எனவே படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், நஷ்டத்தை திருப்பிக் கேட்டுள்ளனர்.

அதற்கு ஒப்புக்கொண்ட சல்மான் கான் ரூ.55 கோடியை திருப்பித் தர முடிவெடுத்துள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் நடித்த பாபா, லிங்கா ஆகிய படங்களை நஷ்டமடைந்த போது அப்பணத்தை திருப்பி கொடுத்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment