நடிகை சமந்தா நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமந்தா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக எதிர்பார்க்கிறார். இதனால் தன்னை தேடி வரும் அனைத்து பட வாய்ப்புகளையும் அவர் ஏற்பது இல்லை.
இந்நிலையில் அவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஜாலியாக கொண்டாடியுள்ளார்.சமந்தா தனது ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியில் கடலில் நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.கடலின் அழகை வர்ணித்து ட்வீட்டியுள்ளார் சமந்தா.
இந்த ட்வீட்டிலும் தன்னுடைய நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். அவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் 29ம் தேதி ஹைதராபாத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் தான் நாக சைதன்யாவின் தம்பி அகிலுக்கும் அவரது காதலிக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நாக சைதன்யா மற்றும் அகிலின் திருமணம் 2017ம் ஆண்டில் நடக்க உள்ளது.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment