தியேட்டர்களில் தேசிய கீதம் ; மோகன்லால் ஆதரவு..!
26 டிச,2016 - 18:09 IST
தியேட்டர்களில் நம் தேசிய கீதத்தை கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை அறிவுஜீவிகள் பலரும் எதிர்க்கும் கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். அதற்கேற்றமாதிரி எதிர்மறையான கருத்துக்களையும் கூறி வருகின்றனர். திரைப்படம் தொடர்பான உத்தரவு என்பதால் முக்கியமாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் இதில் தங்களது கருத்தை கூறி வருகின்றனர்.. இந்தநிலையில்தான் தியேட்டர்களில் கட்டாயம் தேசியகீதம் ஒலிக்கவேண்டும் என இது குறித்து மோகன்லால் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “சினிமா என்பது கலையின் வடிவம்.. அதுமட்டுமல்ல மரியாதை கொடுக்கப்படவேண்டிய ஒன்றும் கூட. அப்படிப்பட்ட சினிமா திரையிடப்படும் தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிபரப்புவது நம் சிறிய வயது காலம் தொட்டே இருப்பதுதான். இது தொடர்பாக எந்த சர்ச்சைகளும் விமர்சனங்களும் தேவையில்லை” என ஆணித்தரமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார் மோகன்லால்.
0 comments:
Post a Comment