ஜூனியர் என்.டி.ஆரின் சாதனையை முறியடித்த ராம் சரண்
30 டிச,2016 - 10:35 IST
தெலுங்கு திரை உலகில் வாரிசு நடிகர்களான மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அல்லு அர்ஜூன் இவர்களுக்கு யார் படத்தின் வசூல் யாரை முந்துகின்றது என்பதை கணிப்பதில் நடிகர்களும் ரசிகர்களும் ஆர்வமுடன் உள்ளனர். ராம் சரண் நடிப்பில் டிசம்பர் 9ல் திரைக்கு வந்த துருவா, திரைப்படம் வெளியிடப்பட்ட அணைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூலை ஈட்டி வருகின்றது. உலகம் முழுவதும், 1.38 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ள துருவா படத்தை ராம் சரண் மற்றும் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரின் பட்ஷா படத்தின் வசூலை துருவா முந்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜூனியர் என்.டி.ஆரின் பாட்ஷா திரைப்படம் வெளிவந்த 15 நாட்களில் 1.28 டாலர் வசூலை ஈட்டியதாம், ராம் சரணின் துருவா திரைப்படமோ 15 நாட்களுக்குள் 1.38 டாலர் வசூல் செய்து ஜூனியர் என்.டி.ஆரின் சாதனையை முறியடித்துள்ளார்.
0 comments:
Post a Comment