இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிருஷ்ண வம்சியின் 'நக்ஷ்த்ரம்'
31 டிச,2016 - 17:25 IST
பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா ஜோடி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் நக்ஷ்த்ரம். போலீஸாக வேண்டும் எனும் லட்சியத்தோடு வாழ்ந்து வரும் சந்தீப் கிஷானை மையப்படுத்திய நக்ஷ்த்ரம் படத்தில் சாய் தரண் தேஜ் மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீநிவாஸலு, வேணுகோபால், சஜ்ஜு போன்றவர்களின் இணை தயாரிப்பில் உருவாகும் நக்ஷ்த்ரம் படத்தின் இறுதிக்காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. ஐதராபாத்தில் உள்ள போலீஸ் கிரவுன்டில் நக்ஷ்த்ரம் படத்தின் இறுதிக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றதாம். படப்பிடிப்பை முடித்து விட்டு விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கவுள்ள படக்குழு பாடல்கள் வெளியீடு விழாவிற்கும் ஏற்பாடு செய்து வருகின்றது. பாடல்கள் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment