Wednesday, December 28, 2016

நயன்தாரா பக்கம் திரும்பிய எதிர்ப்பு


நயன்தாரா பக்கம் திரும்பிய எதிர்ப்பு



28 டிச,2016 - 17:31 IST






எழுத்தின் அளவு:








கத்தி சண்டை படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் சுராஜ் கொடுத்த பேட்டியின்போது, " கமர்ஷியல் சினிமாவில் கதாநாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் கதாநாயகியை கிளாமராக பார்க்கத்தான் விரும்புவார்கள்." என்று தெரிவித்தார்.

சுராஜின் இந்த கருத்திற்கு நயன்தாரா, தமன்னா இருவருமே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். "சுராஜ் என்னிடம் மட்டுமன்றி ஒட்டுமொத்த திரையுலக கதாநாயகிகளிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்" என்று தமன்னா கடுமையாக சாடியிருந்தார்.

“உங்கள் அக்கா தங்கையை இப்படி சொல்வீர்களா?” என்று எல்லைமீறி கமெண்ட் அடித்தார் நயன்தாரா. நயன்தாராவின் கருத்து சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் நயன்தாராவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குறிப்பாக கடந்த 14 வருடங்களில் கவர்ச்சி என்ற பெயரில் நயன்தாரா ஆபாசமாகவே நடித்து வருகிறார் என்கின்றனர். அதிலும் பில்லா படத்தில் நயன்தாரா அணிந்த பிகினி உடை, ஏகன் படத்தில் ஆசிரியையாக நடித்த நயன்தாரா, ஒட்டுமொத்த ஆசிரியை வர்க்கத்தையே அசிங்கப்படுத்துவது போல், ஆபாசமான உடை அணிந்து நடித்தவர்தானே? என விமர்சிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் சுராஜ் மன்னிப்பு கோரியதால் இரண்டு நடிகைகளும் சமாதானமாகிவிட்டனர். ஆனால் நயன்தாரா மீதான மக்களின் தாக்குதல் சமூகவலைத்தளங்களில் இன்னும் அடங்கவில்லை.


0 comments:

Post a Comment