Tuesday, December 27, 2016

ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய்-ன் அதிரடி சாதனை


கோலிவுட்டில் தயாராகும் படங்கள் உலக தரத்தில் உருவாகி வருவதால் சமீபகாலமாக இந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளிலும் வெளியாகி வருகின்றன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா, சீனா என பல நாடுகளில் பிரமாண்டமாக வெளியாகி வருகின்றன.


அப்படி அயல்நாடுகளில் அதிகப்படியான தியேட்டர்களில் முதலில் ரஜினி நடித்த படங்கள்தான் வெளியாகி வந்தன. அந்த வகையில், அவரது கபாலி படம் முதன்முறையாக பாரிஸில் உள்ள தி கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் வெளியிடப்பட்டது.


அப்படி ரஜினியின் கபாலி செய்த சாதனையைத் தொடர்ந்து இப்போது விஜய்யின் பைரவா படமும் ஒரு சாதனை நிகழ்த்தவிருக்கிறது. வருகிற பொங்கல் தினத்தில் உலகமெங்கிலும் வெளியாகயிருக்கும் இந்த படம் ஐரோப்பாவிலுள்ள லாட்வியாவில் உள்ள திரையரங்குகளிலும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


இதற்கு முன்பு இந்த பகுதிகளில் இந்தி படங்கள் வெளியானபோதும், ஒரு தென்னிந்திய படம் வெளியாவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்


















0 comments:

Post a Comment