விஐபி-2 படத்தில் வில்லியாக நடிக்கும் கஜோல்
28 டிச,2016 - 17:36 IST
'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்ளாப் அடித்து துவக்கி வைத்தார். தனுஷின் 'வுண்டர்பார்' நிறுவனமும், கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி கிரியேஷன்ஸும்' இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.
விஐபி முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷும், கதாநாயகியாக நடித்த அமலா பாலும் இரண்டாவது பாகத்திலும் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் முந்தைய பாகத்தில் விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, ரிஷிகேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடிக்கிறார்.
ராஜீவ் மேனன் இயக்கிய 'மின்சாரக்கனவு' படத்தில் பிரபு தேவாவுடன் கதாநாயகியாக நடித்த கஜோல் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இது. 'விஐபி-2' படத்தில் கஜோல் வில்லியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படையப்பா நீலாம்பரி வேடத்தைப்போல் இப்படத்தில் கஜோல் நடிக்கும் வேடத்தை அமைத்திருக்கிறார்களாம். இப்படத்தின் ஒளிப்பதிவை சமீர் தாஹிர் கவனிக்கிறார். ஷால் ரோல்டன் இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிடும் திட்டத்தில் உருவாகிறது 'விஐபி-2'. இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கஜோலுக்கு 4 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல்.
0 comments:
Post a Comment