டைரக்டர் ஹரி இயக்கிய தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை பானு. அதன்பிறகு தமிழில் பல படங்களில் நடித்தார். என்றாலும், அழகர்மலை, மூன்று பேர் மூன்று காதல் உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு பெயர் வாங்கிக்கொடுத்தன.
அதன்பிறகு கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்காமல் வாய்மை, பாம்புசட்டை உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த பானு, 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வெளியான வாய்மை வெற்றி பெறவில்லை. அவர் நடித்துள்ள இன்னொரு படமான பாம்பு சட்டை விரைவில் திரைக்கு வருகிறது. இதுவரை நார்மலான வேடங்களில் நடித்த அவருக்கு இந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் என்பதால் அதை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம் பானு.
அதனால் பாம்பு சட்டை வெளியானால் பானுவின் நடிப்பு பேசப்படும் என்கிறார்கள். இந்நிலையில், அந்த படக்குழுவினர் தனது நடிப்பு குறித்து பெருமையாக சொல்வதை கேட்ட பானு, ஒருவேளை எனது நடிப்பு பேசப்பட்டால், மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று அதிரடியாக கூறியுள்ளாராம்.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment