கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் கிறிஸ்துமஸை உத்தரகண்டில் கொண்டாடியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடியுள்ளார்.
யார் கண்ணிலும் படமால் நிம்மதியாக இருக்க அவர்கள் உத்தரகண்ட் சென்றனர்.உத்தரகண்ட் மாநில பிராண்ட் அம்பாசிடரான கோஹ்லி அங்கு வந்துள்ளதை அறிந்த அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் அவரையும், அனுஷ்காவையும் வரவேற்று ட்வீட் போட்டுவிட்டார்.
Welcome to #Uttarakhand @AnushkaSharma @imVkohli Hope you have memorable moments throughout your visit #VisitUttarakhand #UttarakhandTourism
— Harish Rawat (@harishrawatcmuk) December 24, 2016
கோஹ்லியும், அனுஷ்காவும் இந்த ஆண்டின் துவக்கத்தில் காதலை முறித்துக் கொண்டனர். அதன் பிறகு மீண்டும் சேர்ந்துவிட்டனர். திருமணம் செய்ய கோஹ்லி துடிக்கிறார். அனுஷ்காவோ திருமணம் பற்றி யோசிக்கக் கூட மறுக்கிறார்.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment