நயன்தாரா நடிக்கும் புதிய த்ரில்லர் படம்
28 டிச,2016 - 15:45 IST
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்தும் உள்ள படங்களில் நடிக்க மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 'டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம், சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் என பல படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு புதிய த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை பரத் கிருஷ்ணமாச்சாரி என்ற புதியவர் இயக்க உள்ளார். இந்தப் படத்தின் பெரும் பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளதாம். பத்திரிகையாளராக இருக்கும் நயன்தாரா தான் யார், தனது குடும்பம் யார், என்பதைத் தெரிந்து கொள்ள பல நாடுகளுக்கு பயணப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறதாம். முடிவில் அதற்கு விடை கிடைத்ததா என்பதுதான் படத்தின் கதையாம்.
நயன்தாரா தற்போது நடிக்க முடிவெடுத்துள்ள படங்களில் தனக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை மட்டுமே கவனிக்கிறாராம். பெரிய ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு விருப்பமில்லையாம். யார் ஹீரோ என்பது எல்லாம் கவலையில்லை என்றும் அவர் முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள்.
இந்த ஆண்டில் நயன்தாரா நடித்த படங்கள் தோல்வியைச் சந்தித்த நிலையில் அவரைத் தேடி பல புதிய வாய்ப்புகள் வருவது ஆச்சரியமாக உள்ளது.
0 comments:
Post a Comment