Thursday, December 29, 2016

பெயரை மாற்றிய புதுவரவு நடிகைகள் மனீஷாஜித்-அதிதி!


பெயரை மாற்றிய புதுவரவு நடிகைகள் மனீஷாஜித்-அதிதி!



29 டிச,2016 - 08:44 IST






எழுத்தின் அளவு:








விந்தை, கமரக்கட்டு ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் மனீஷாஜித். அதையடுத்து தற்போது திமில் உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் மனீஷாஜித் என்ற தனது பெயரை ரெஹானா என்று மாற்றியிருக்கிறார் அவர். காரணம் கேட்டால், மனீஷாஜித் என்ற பெயரில் நான் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. அதனால் ராசியில்லாத நடிகை என்று நினைக்கிறார்கள். அதனால்தான், அந்த பெயரே ராசியில்லை என்று நான் இப்போது பெயரையே ரெஹானா என்று மாற்றிவிட்டேன் என்கிறார் மனீஷாஜித்.

இதேபோல், பட்டதாரி படத்தில் நடித்த அதிதியும் தனது பெயரை அதிதிமேனன் என்று மாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது நிஜ பெயர் ஆதிரா. சினிமாவுக்காக அதிதி என்று மாற்றினேன். ஆனால் இதே பெயரில் ஏற்கனவே சில நடிகைகள் தமிழ்ப்படங்களில் நடித்து வருவது இப்போதுதான் எனக்கு தெரிந்தது. ஒரே பெயரில் பல நடிகைகள் இருந்தால் தேவையில்லாத குழப்பம் வரும் என்பதினால்தான் எனது பெயருடன் மேனனை சேர்த்துக்கொண்டுள்ளேன். மேலும், இந்த மேனன் என் பெயருடன் சேர்ந்த பிறகு லட்சுமிமேனனைப்போன்று நானும் தமிழ் சினிமாவில் இடம் பிடிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது என்கிறார் அதிதிமேனன்.


0 comments:

Post a Comment