எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வளர்ந்து வருகின்றனர்.
நடிப்புத் துறைகளில் பல பெண்கள் இருந்தாலும், இயக்கத்தில் ஒரு சிலரே தங்கள் படைப்புகளால் உயர்ந்து நிற்கின்றனர்.
இந்த 2016ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் தங்கள் தடங்களை பதித்த பெண் இயக்குனர்கள் ஒரு சிலரைப் பற்றி இங்கே காண்போம்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்…
ஒரு பக்கம் நடிப்பு. ஒரு பக்கம் டிவி நிகழ்ச்சிகள் என பரபரப்பாக இருந்தாலும் இயக்கத்திலும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் கை ஓங்கியே உள்ளது.
இந்தாண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘அம்மணி’ எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
பெற்றோரை விட பணமே இன்று வாழ்க்கை தீர்மானிக்கிறது என்பதை உருக்கமாக பதிவு செய்திருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
உஷா கிருஷ்ணன்…
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆண் பாவம் படத்தை யாராலும் மறக்க முடியாது.
அதுபோன்ற அண்ணன் தம்பிகளின் ஜாலி கலாட்டக்களை சொல்ல ஒரு படம் வரவில்லையே என்ற ஏக்கத்தை உஷா கிருஷ்ணன் தீர்த்து வைத்தார்.
ராஜா மந்திரி என்ற படத்தில் கலையரசன், காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் மூலம் ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றார் இதன் இயக்குனர்.
கீதாஞ்சலி செல்வராகவன்…
‘மாலை நேரத்து மயக்கம்’ இப்படத்தின் இயக்குனர் கீதாஞ்சலி என்றாலும் இவரது கணவர் செல்வராகவனின் சாயலே படம் முழுக்க இருந்தது.
கணவன், மனைவி இடையே நடக்கும் சிறசிறு மோதல்களையும் ஊடல்களையும் செல்வராகவன் பாணியில் கூறியிருந்தார் கீதாஞ்சலி.
இப்படம் இந்தாண்டு 2016 பிறந்த தினமான ஜனவரி 1ஆம் தேதியே வெளியானது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா…
மாதவன் மற்றும் ரியல் பாக்ஸர் ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கியிருந்தார் சுதா கொங்கரா.
உண்மையிலேயே பெண்தான் இயக்கினாரா? என்ற சந்தேகம் எல்லாருக்கும் ஏற்பட்டது.
படத்தில் மாதவனையும் ரித்திகாவையும் அவ்வளவு தத்ரூபமாக காட்டியிருந்தார்.
மேலும் விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியலையும் அப்பட்டமாக காட்டியிருந்தார்.
இவர் இதற்குமுன்பே துரோகி என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.
நெகடிவ்வான தலைப்புகள் வெற்றிப் பெறாது என்ற செண்டிமென்டையும் இப்படம் உடைத்தது.
0 comments:
Post a Comment