Wednesday, December 28, 2016

2016-ள் களம் கண்டு கலக்கிய டாப் 5 புதுமுக நடிகைகள்


தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு தான் பஞ்சம். ஆனால், ஹீரோயின்கள் வருடத்திற்கு குறைந்தது 20 பேராவது தமிழ் சினிமாவில் அறிமுக நாயகிகளாக எண்ட்ரீ கொடுப்பார்கள், இதில் மக்கள் மனதை யார் வென்றார்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம், இந்த வருடம் கலக்கிய ஹீரோயின்கள் யார் என்பதை பார்ப்போம்.


01.மஞ்சிமா மோகன்


தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியவர், ஒரு வடக்கன் செல்பி படத்தில் இவரின் கதாபாத்திரம் மலையாள ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டாலும் தமிழ் ரசிகர்கள் விரும்பியே பார்த்தனர், முதல் படமே கௌதம், சிம்பு என பெரிய கூட்டணி என்பதால் நல்ல ரீச் கிடைத்தது.


02.மடோனா சபஸ்டின்


மடோனா தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் என்று தான் சொல்ல முடியாது, ஏனெனில் அந்தளவிற்கு ப்ரேமம் படத்தில் செலினாக ரசிகர்களை கவர்ந்து விட்டார், முதல் படமே விஜய் சேதுபதி என்று திறமையான நடிகருக்கு சவலாக நடித்து அசத்திவிட்டார்.


03.அனுபமா பரமேஸ்வரன்


ப்ரேமம் மேரி என்றால் சொன்னால் தான் தெரியும், அந்த அளவிற்கு மேரியின் தாக்கம் தமிழகத்தை தாக்கியது, முதல் படமே தனுஷ் போன்ற முன்னணி நடிகருடன் தமிழல் அறிமுகமாகி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.


04.நிகிலா விமல்


நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு என்று கூறுவது போல் முகம், வெற்றிவேல், கிடாரி என தொடர்ந்து கிராமத்து படங்களாக நடித்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.


05.நிவேதா பெர்துராஜ்


பெயரே வித்தியாசமாக இருக்கின்றதே என கவணிக்கப்பட்டவர், ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமாகிய இவர் மதுரைக்கார பொண்ணு, நன்றாக தமிழ் பேசத்தெரிந்த தமிழ் நடிகை, முதல் படம் சிறிய எண்ட்ரீ என்றாலும், ஜெயம் ரவி, உதயநிதி என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களாக கலக்கவுள்ளார்.




இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்


















0 comments:

Post a Comment