Tuesday, December 27, 2016

ஜன.,2-ம் தேதி ‛அதே கண்கள்' சிங்கிள் டிராக் ரிலீஸ்


ஜன.,2-ம் தேதி ‛அதே கண்கள்' சிங்கிள் டிராக் ரிலீஸ்



27 டிச,2016 - 14:21 IST






எழுத்தின் அளவு:








பல வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சிவி குமார் தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‛அதே கண்கள்'. கலையரசன், ஷிவதா, ஜனனி அய்யர், பாலசரவணன் ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் அதே கண்கள் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தப்படியாக படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட உள்ளார்கள். அதன்படி, வருகிற ஜன.,2-ம் தேதி ‛‛தந்திரா...'' என்ற சிங்கிள் டிராக் பாடலை வெளியிட இருக்கிறார்கள். மார்ச் அல்லது ஏப்ரல் படம் திரைக்கு வரும் என தெரிகிறது.


0 comments:

Post a Comment