Friday, December 23, 2016

நயன்தாராவின் ‛டோரா'வில் கார் பேய்


நயன்தாராவின் ‛டோரா'வில் கார் பேய்



23 டிச,2016 - 15:05 IST






எழுத்தின் அளவு:








2016ம் ஆண்டு முழுவதும் நயன்தாராவின் ஆதிக்கம்தான் இருந்தது. அதேப்போல 2017-ளிலும் அவர் ஆதிக்கம்தான் இருக்கப்போகிறது. அவரை மையப்படுத்தி தயாராகி வரும் டோரா, கொலையுதிர்காலம், இமைக்கா நொடிகள், அறம் அனைத்தும் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது. இந்த வரிசையில் ஜனவரி இறுதி வாரத்தில் முதலில் வெளிவர இருக்கிறது டோரா.

இயக்குனர் சற்குணம் தயாரிக்கும் இந்தப் படத்தை அவரது உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்குகிறார். விவேக் மெர்வின் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நயன்தாரா மாயா வெற்றியில் இருந்தபோது தாஸ் ராமசாமி அதே மாதிரியான ஒரு கதையை சொல்லி நயன்தாராவை இம்ப்ரஸ் பண்ணி இந்த படத்தை ஓகே பண்ணிவிட்டார். சீக்கிரத்தில் ஒத்துக்கொள்ள மாட்டார் நயன்தாரா, ஒத்துக் கொண்டால் கைவிடமாட்டார் இது அவரது பாலிசி. அதனால் இப்போது படத்தை முழுவதுமாக நடித்து கொடுத்து விட்டு அடுத்த பிராஜக்டுக்கு சென்று விட்டார். படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டு அதுவும் ஹிட்டாகியிருக்கிறது.

இது ஒரு சிம்பிளான கதை. அப்பா தம்பி ராமய்யாவுக்கும், மகள் நயன்தாராவுக்கும் இடையே நிறைய அன்பும், நிறைய சண்டையும் இருக்கும். இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். அனைத்துக் கொள்வார்கள். இப்படி ஒரு முறை இருவருக்கும் சண்டை முற்றியதும் நயன்தாரா காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார். இரவில் தனியாக கிளம்பும் நயன்தாராவுக்கு யாரும் எதிரியில்லை. யாராலும் பிரச்சினையில்லை, அந்த கார்தான் பிரச்சினை. காரணம் கார்தான் பேய். திகில், காமெடி நிறைந்த பேண்டசி பேய் படமாக உருவாகி வருகிறது.


0 comments:

Post a Comment