தங்கல் படத்தை பார்த்து நாடே வியக்கிறது - சைப் அலி கான்
28 டிச,2016 - 17:13 IST
மல்யுத்தத்தை மையப்படுத்தி அமீர்கானின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛தங்கல்'. இப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வசூலை பாக்ஸ் ஆபிசில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தங்கல் படத்தை பார்த்த சகநடிகர் சைப் அலிகானும் புகழ்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது... ‛‛நான் பார்த்த படங்களிலேயே மிகச்சிறந்த படம் ‛தங்கல்'. அமீர்கான் நிச்சயம் ஒரு சிறப்பாக நடிகர், என்ன மாதிரி அவர் கதை தேர்வு செய்து நடித்திருக்கிறார். நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் தங்கல். ஏற்கனவே இந்தப்படத்தை நாடே வெகுவாக பாராட்டி வருவதோடு வியந்து வருகிறது'' என்று புகழ்ந்துள்ளார் சைப்.
தற்போது சைப், தனக்கு மகன் பிறந்த சந்தோஷத்தை கொண்டாடி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தப்படியாக ‛செப்' என்ற படம் 2017, ஜூலை 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment