Saturday, December 24, 2016

நயன்தாராவைத் தொடர்ந்து திரிஷாவுக்கு ஜோடியான விஜய் சேதுபதி


விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு 6 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இதில் பெரும் பாலான படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அடுத்து ‘புரியாத புதிர்’ ‘கவண்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.


ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்தார். இப்போது புதிய படத்தில் இவருடன் திரிஷா ஜோடி சேர்ந்திருக்கிறார். இதை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்‘ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இயக்குகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்த கோபால் தயாரிக்கிறார்.


விஜய் சேதுபதியும்-திரிஷாவும் இணைந்து நடிக்கும் இந்த படத்துக்கு ‘96’ என்று பெயர் வைத்துள்ளனர். மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.


0 comments:

Post a Comment